உதவித்தொகை கேட்டு அலையும் முதியவர்கள்
உதவித்தொகை கேட்டு அலையும் முதியவர்கள்
உதவித்தொகை கேட்டு அலையும் முதியவர்கள்
ADDED : செப் 06, 2011 12:56 AM
தேனி : முதியோர் உதவித்தொகை உத்தரவு பெற்று எட்டு மாதங்கள் ஆகியும், பணம் வழங்கப்படாததால், முதியவர்கள் தவித்து வருகின்றனர்.
கடந்த பிப்., மார்ச் மாதங்களில், மாவட்டம் முழுவதும் பலருக்கு முதியோர் உதவித்தொகை உத்தரவு வழங்கப்பட்டது. தேர்தல் வந்ததால் உத்தரவு வழங்கப்பட்டவர்களுக்கு நிதி வழங்கப்படவில்லை. அவர்களுக்கு இது வரை உதவித்தொகை வழங்கப்படவில்லை.உதவித்தொகை கேட்டு அந்த முதியவர்கள் தங்களிடம் உள்ள உத்தரவினை எடுத்துக் கொண்டு தாலுகா அலுவலகங்களுக்கு அலைந்து வருகின்றனர். உத்தரவு பெற்ற பலர் இறந்து விட்ட நிலையில், மீதம் உள்ளவர்களுக்காவது உதவித்தொகை வழங்க வேண்டும், என கோரிக்கை விடுத்துள்ளனர்.