ஹிந்துக்கள் பற்றிய ராகுலின் பேச்சில் தவறில்லை: சஞ்சய் ராவத் 'சர்டிபிகேட்'
ஹிந்துக்கள் பற்றிய ராகுலின் பேச்சில் தவறில்லை: சஞ்சய் ராவத் 'சர்டிபிகேட்'
ஹிந்துக்கள் பற்றிய ராகுலின் பேச்சில் தவறில்லை: சஞ்சய் ராவத் 'சர்டிபிகேட்'
ADDED : ஜூலை 02, 2024 01:04 PM

மும்பை: ''ஹிந்துக்கள் பற்றி ராகுல் தவறாக எதுவும் சொல்லவில்லை. ஹிந்துக்கள் என்று கருதுபவர்கள் அவரது பேச்சை மீண்டும் கேட்க வேண்டும்'' என உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி., சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
'' பா.ஜ.,வின் ஹிந்துக்கள் வன்முறையாளர்கள்; உண்மையான ஹிந்துக்கள் அல்ல. தங்களை ஹிந்து என கூறிக்கொள்பவர்கள் 24 மணி நேரமும் வன்முறையை, வெறுப்பை துாண்டி விடுகின்றனர்,'' என, லோக்சபாவில் நேற்று (ஜூலை 1) எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் பேசியதை அடுத்து அமளி ஏற்பட்டது. ''ஹிந்துக்களை வன்முறையாளர்கள் என்பதா?'' என்று பிரதமர் மோடி பதிலடி கொடுத்தார். இது குறித்து உத்தவ் சிவசேனா கட்சி எம்.பி., சஞ்சய் ராவத் கூறியதாவது:
பா.ஜ., ஒட்டுமொத்த ஹிந்து மதத்தின் பிரதிநிதி அல்ல; பா.ஜ.,வும் ஹிந்துத்துவாவும் சமம் அல்ல என ராகுல் பேசியிருந்தார். ஹிந்துத்துவா வெறுப்பை பரப்புவது இல்லை. பா.ஜ., சித்தரித்து வைத்துள்ள போலி ஹிந்துத்துவாவை ஏற்க மாட்டோம். ஹிந்துக்கள் பற்றி ராகுல் தவறாக எதுவும் சொல்லவில்லை. ஹிந்துக்கள் என்று கருதுபவர்கள் அவரது பேச்சை மீண்டும் கேட்க வேண்டும். 'ஹிந்துத்வா' என்பது மிகவும் பரந்த சொல் என்று ராகுல் கூறியதை பா.ஜ., புரிந்து கொள்ளாது. இவ்வாறு அவர் கூறினார்.