/உள்ளூர் செய்திகள்/மதுரை/சாத்தையாறு அணை மீன்பண்ணை மேம்படுத்த மக்கள் எதிர்பார்ப்புசாத்தையாறு அணை மீன்பண்ணை மேம்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
சாத்தையாறு அணை மீன்பண்ணை மேம்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
சாத்தையாறு அணை மீன்பண்ணை மேம்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
சாத்தையாறு அணை மீன்பண்ணை மேம்படுத்த மக்கள் எதிர்பார்ப்பு
ADDED : ஆக 22, 2011 02:27 AM
மதுரை : ஆண்டுக்கு 9 டன் மீன்களை உற்பத்தி செய்த சாத்தையாறு அணையின் மீன்
பண்ணை பராமரிப்பின்றி உள்ளது.
அதை மேம்படுத்த மாவட்ட நிர்வாகமும், மீன்
வளர்ச்சித்துறையும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.அணை 1965 ம் ஆண்டு
கட்டப்பட்ட போதே மீன் பண்ணையும் உருவாக்கப்பட்டது. மீன் வளர்ச்சித்துறை
நிர்வாகத்தின் கீழ் சார்பு ஆய்வாளர் இதை கவனித்து வருகிறார். இப்பண்ணையின்
நாற்றங்காலில் மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, இங்கிருந்து வைகை, பெரியாறு
அணைகளில் மீன் வளர்க்க அனுப்பப்படுகிறது. சிறுமலையின் நீர்ப்பிடிப்பு
பகுதியாக இந்த அணை உள்ளதால் மூலிகைகள் கலந்த நீர் அணையில் கலக்கிறது.
இந்நீரை அருந்தி வாழும் மீன் குஞ்சுகள் மருத்துவ குணம் உள்ளவையாகவும்,
சுவையானவையானதாகவும் உள்ளன. தமிழகத்தில் மட்டுமின்றி கேரளாவிலும்
சாத்தையாறு அணை மீனுக்கு கிராக்கி உண்டு. இங்கு ரோகு, கட்லா, வெள்ளி,
வெள்ளிகெண்டை, திபேலி போன்ற ரக மீன்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
ஆண்டுக்கு 9 டன் மீன் இங்கு உற்பத்தியாகும்.சமீபகாலமாக மீன்பண்ணை
பராமரிப்பு இன்றி உள்ளது. மீன் நாற்றங்காலும் நீரின்றி வறண்டுள்ளது. இங்கு
மீன் உற்பத்தி குறைந்து விட்டதால் இங்கு பணியாற்றிய மீன் வளத்துறை சார்பு
ஆய்வாளரும் வேறு பணிக்கு அனுப்பப்பட்டு விட்டார். மீன் விற்பனையும்
நிறுத்தப்பட்டு விட்டது. மிக அரிய, சுவையான பலராலும் விரும்பப்படும்
மீன்கள் மீண்டும் இங்கு கிடைக்க மாவட்ட நிர்வாகமும்,
மீன்வளர்ச்சித்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்