/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/டையிங் கம்பெனி ஊழியர் வீட்டில்30 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டுடையிங் கம்பெனி ஊழியர் வீட்டில்30 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு
டையிங் கம்பெனி ஊழியர் வீட்டில்30 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு
டையிங் கம்பெனி ஊழியர் வீட்டில்30 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு
டையிங் கம்பெனி ஊழியர் வீட்டில்30 பவுன் நகை, ரூ.3 லட்சம் திருட்டு
ADDED : செப் 16, 2011 01:32 AM
திருப்பூர்:திருப்பூரில் டையிங் கம்பெனி ஊழியர் வீட்டுக்குள் நுழைந்த மர்ம
நபர்கள், பீரோவில் இருந்த 30 பவுன் நகை மற்றும் மூன்று லட்சம் ரூபாயை
திருடிச் சென்றுள்ளனர்.திருப்பூர் தாராபுரம் ரோட்டில் சந்திராபுரம் கிழக்கு
பாரதி நகர் நான்காவது வீதியை சேர்ந்தவர் வரதராஜன் (51);
மணியகாரம்பாளையத்தில் உள்ள டையிங் கம்பெனி ஊழியர். அவரது மனைவி சித்ரலேகா
ஊருக்கு சென்றிருந்தார்; வரதராஜனும் வீட்டை பூட்டி விட்டு வேலைக்குச்
சென்று விட்டார். வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள், முன்பக்க கதவு
மற்றும் உள்பக்க கதவுகளின் லாக்கை கம்பி மூலம் நெம்பி, உடைத்து உள்ளே
சென்றுள்ளனர். பீரோவில் வைத்திருந்த 30 பவுன் தங்க நகை மற்றும் மூன்று
லட்சம் ரூபாய் பணத்தை திருடிச்சென்றனர்.வேலைக்குச் சென்று விட்டு, வீடு
திரும்பிய வரதராஜன், வீட்டில் நகை திருடப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி
அடைந்தார். ரூரல் போலீசார் விசாரணை நடத்தினர். எஸ்.பி., பாலகிருஷ்ணன்,
டி.எஸ்.பி.,ராஜாராம் ஆகியோர் சம்பவம் நடந்த வீட்டில் ஆய்வு செய்தனர்.
திருட்டு நடந்த வீட்டில், கைரேகை நிபுணர்கள் ஆய்வு செய்தனர். அப்போது,
கதவு, பீரோ ஆகியவற்றில் கைரேகை சிக்காமல் இருக்க தண்ணீரால் அழித்ததோடு,
மோப்ப நாய் வந்தால் கண்டுபிடிக்காமல் இருக்க சமையல் அறையில் இருந்த
சாம்பார் பொடியை எடுத்து, வீட்டுக்குள் திருடன் நடந்து சென்ற பகுதி
முழுவதும் கொட்டிச் சென்றுள்ளான். இருப்பினும், போலீசார் முக்கிய தடயங்களை
கண்டுபிடித்துள்ளனர்.நகைகளை திருடியது மட்டுமின்றி, போலீசாருக்கு தடயங்கள்
சிக்காமல் இருக்க, எச்சரிக்கையாக திருடன் இருந்துள்ளதால், பழைய
குற்றவாளியாக இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை
துவக்கியுள்ளனர்.


