ADDED : ஜூலை 12, 2011 12:22 AM
மண்ணச்சநல்லூர்: திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர், ராசாம்பாளையம், மேலூரை சேர்ந்தவர் இளையராஜா (24).
இவர் வீட்டில் இருந்த நகையை அடமானம் வைத்தும், ஆடுகளை விற்றும் சூதாடி வந்தார். இதை அவரது தாய் கண்டித்ததால், நேற்று காலை பூச்சிமருந்தை எடுத்து குடித்தார். மயங்கி கிடந்தவரை அக்கம் பக்கத்தினர் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.