Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/பிரதோஷ சிறப்பு பூஜை

பிரதோஷ சிறப்பு பூஜை

பிரதோஷ சிறப்பு பூஜை

பிரதோஷ சிறப்பு பூஜை

ADDED : ஜூலை 11, 2011 11:57 PM


Google News
காரிமங்கலம்: காரிமங்கலம் அபிதாகுஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில், பிரதோஷ சிறப்பு பூஜை இன்று (ஜூலை 12) நடக்கிறது. இதையொட்டி, மாலை 4 மணிக்கு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசன், குருக்கள் பிரகாஷ் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். * தர்மபுரி கோட்டை மல்லிகார்ஜுனேஸ்வரர் கோவில், நெசவாளர் காலனி மகாலிங்கேஸ்வரர் கோவில்களில் பிரதோஷத்தையொட்டி, இன்று மாலை 4 மணிக்கு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. * காவேரிப்பட்டணம் அடுத்த பெண்ணேஸ்வரம் மடம் வேதவள்ளி சமேத பெண்ணேஸ்வரர் ஸ்வாமி கோவிலில், இன்று மாலை 4 மணிக்கு நந்திக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் குருக்கள் மோகன் குமார் மற்றும் பக்தர்கள் செய்கின்றனர்.

* பாலக்கோடு பால்வண்ணநாதர் கோவிலில், மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள் நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us