80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்பு: ஐ.நா., பொதுச்சபை தலைவர் பாராட்டு
80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்பு: ஐ.நா., பொதுச்சபை தலைவர் பாராட்டு
80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்பு: ஐ.நா., பொதுச்சபை தலைவர் பாராட்டு
UPDATED : ஆக 02, 2024 11:15 AM
ADDED : ஆக 02, 2024 11:08 AM

நியூயார்க்: 'ஸ்மார்ட்போன் உதவியால், கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்' என ஐ.நா., பொதுச்சபை தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் பாராட்டு தெரிவித்தார்.
கடந்த 10 ஆண்டுகளாக பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ஆட்சியில் டிஜிட்டல் மயமாக்கலுக்கு முக்கிய கவனம் செலுத்தப்படுகிறது. 2016ல் ரூ.500 மற்றும் ரூ.1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்தன.
கோடிக்கணக்கான கிராமப்புற மக்களுக்கு அரசு சார்பில் வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டன. வங்கிக் கணக்குகள் ஆதாருடன் இணைக்கப்பட்டன. பல்வேறு அரசு திட்டங்களுக்கு அவர்களின் வங்கியில் நேரடியாக பணம் செலுத்தப்படுகிறது.
வணிகங்கள்
இந்நிலையில், ஐ.நா., பொதுச்சபையில் அதன் தலைவர் டென்னிஸ் பிரான்சிஸ் பேசியதாவது: இந்தியாவில் உள்ள கிராமப்புற விவசாயிகள் வங்கியில் கணக்குகளை துவங்காமல், எந்த தொடர்பும் இல்லாமல் இருந்து வந்தனர். தற்போது தங்களது அனைத்து வணிகங்களையும் ஸ்மார்ட் போனை பயன்படுத்தி ஆன்லைனில் செய்கின்றனர் . வாடிக்கையாளர்களிடம் இருந்து தங்களது பணத்தை ஆன்லைன் மூலம் பெறுகின்றனர்.
தொழில்நுட்பங்கள்
இந்தியாவில் டிஜிட்டல் சேவையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமங்களுக்கும் வங்கி சேவைகளை விரிவுபடுத்துவதில் கவனம் செலுத்தப்படுவது பாராட்டுக்குரியது. ஸ்மார்ட்போன் உதவியால் கடந்த 5 முதல் 6 ஆண்டுகளில் 80 கோடி இந்தியர்கள் வறுமையில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு தொழில்நுட்பங்கள் அடிப்படை தேவையாக இருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.