அமலாக்கத்துறையை ஏவி விட திட்டம்; ராகுலுக்கு ஏன் அச்சம் ?
அமலாக்கத்துறையை ஏவி விட திட்டம்; ராகுலுக்கு ஏன் அச்சம் ?
அமலாக்கத்துறையை ஏவி விட திட்டம்; ராகுலுக்கு ஏன் அச்சம் ?
UPDATED : ஆக 02, 2024 12:36 PM
ADDED : ஆக 02, 2024 09:39 AM

புதுடில்லி: தன் மீது அமலாக்கத்துறையை ஏவி விட மத்திய அரசு திட்டம் தீட்டியிருப்பதாக எதிர்கட்சி தலைவர் ராகுல் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ராகுல் கூறியுள்ளதாவது: சமீபத்திய பார்லி., கூட்டத்தில் பட்ஜெட் குறித்து விமர்சித்து பேசினேன். இதில் இளைஞர்கள், ஏழைகள், விவசாயிகள், பழங்குடி நலன் தொடர்பான திட்டங்கள் ஏதுமில்லை என்றும் எடுத்துரைத்தேன். இது மத்திய அரசுக்கு சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக என் மீது அமலாக்கத்துறையை ஏவி விட்டு சோதனை நடத்த முயற்சிப்பதாக எனக்கு தகவல்கள் வருகிறது. நான் திறந்த கரங்களோடு உங்களை வரவேற்கிறேன். டீ, பிஸ்கட் நான் தருகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ஆனால் பா.ஜ., தரப்பில் இது மறுக்கப்பட்டுள்ளது. இது ஆதாரமற்றது என்றும் கூறியுள்ளது.