/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/கோவிலில் அங்கன்வாடி மையம் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லைகோவிலில் அங்கன்வாடி மையம் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை
கோவிலில் அங்கன்வாடி மையம் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை
கோவிலில் அங்கன்வாடி மையம் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை
கோவிலில் அங்கன்வாடி மையம் குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை
ADDED : ஆக 11, 2011 03:49 AM
சேந்தமங்கலம் : 'நாமக்கல் அருகே இடவசதி இல்லாததால், அங்கன்வாடி குழந்தைகள் மையம் மாரியம்மன் கோவிலில் செயல்பட்டு வருகிறது.
அதனால், குழந்தைகளுக்கு பாதுகாப்பற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே, அருகில் உள்ள ஊராட்சி துவக்கப்பள்ளி கட்டிடத்துக்கு மாற்ற வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சேந்தமங்கலம் அடுத்த புதுச்சத்திரம் யூனியன், திருமலைப்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட தெவ்வாய்பட்டி கிராமம், 3வது வார்டில் அங்கன்வாடி குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த கட்டிடத்தில் போதிய இடமும், காற்றோற்ற வசதியும் இல்லாமல் உள்ளது.அதனால், காப்பகத்துக்கு வரும் குழந்தைகளை, அருகில் உள்ள மாரியம்மன் கோவிலில் அமரவைத்து உணவு பரிமாறி வருகின்றனர். அதன் அருகிலேயே, ஊராட்சி துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. அங்கு கட்டிடம் காலியாக உள்ளது. காலியாக உள்ள கட்டிடத்தில் அங்கன்வாடி குழந்தைகள் மையத்தை மாற்ற வேண்டும் என்பது, அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.ஆனால், அது குறித்து எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் சம்பந்தப்பட்ட துறை உயர் அதிகாரிகள் மெத்தனமாக இருந்து வருகின்றனர். கோவில் வளாகத்தில் குழந்தைகளை வைத்து பராமரித்து வருவது, பாதுகாப்பற்ற சூழ்நிலையை உருவாக்கி இருக்கிறது.'குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு அங்கன்வாடி மையத்தை அருகில் உள்ள ஊராட்சி துவக்கப்பள்ளி கட்டிடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.