/உள்ளூர் செய்திகள்/தேனி/லாஞ்சரை கொண்டு வந்தது யார். ஐ.பி., போலீசார் தேவாரத்தில் முகாம்லாஞ்சரை கொண்டு வந்தது யார். ஐ.பி., போலீசார் தேவாரத்தில் முகாம்
லாஞ்சரை கொண்டு வந்தது யார். ஐ.பி., போலீசார் தேவாரத்தில் முகாம்
லாஞ்சரை கொண்டு வந்தது யார். ஐ.பி., போலீசார் தேவாரத்தில் முகாம்
லாஞ்சரை கொண்டு வந்தது யார். ஐ.பி., போலீசார் தேவாரத்தில் முகாம்
ADDED : ஜூலை 29, 2011 11:11 PM
தேவாரம் : ராக்கெட் லாஞ்சரை கொண்டு வந்தது யார், என்பதை விசாரிக்க மத்திய புலானாய்வு பிரிவு(ஐ.பி.,), தீவிரவாதிகள் தடுப்பு பிரிவு போலீஸ் குழு தேவாரத்தில் முகாமிட்டுள்ளது.
கடந்த திங்களன்று தேவாரத்தில் ராக்கெட் லாஞ்சர் வெடித்ததில், இருவர் இறந்தனர். மத்திய துணை ராணுவப்பிரிவு அதிகாரிகள், வெடித்த லாஞ்சர், கான்பூர் ராணுவ தொழிற்சாலையில் தயாரானதை உறுதி செய்தனர்.இந்நிலையில், தேவாரத்திற்கு லாஞ்சரை யார் கொண்டு வந்தது, என போலீசாருக்கு தகவல் கிடைக்கவில்லை. ராணுவ வீரர்கள் தாங்கள் பணியாற்றியதன் நினைவாக கொண்டு வந்ததா அல்லது மாவோயிஸ்ட்கள் சதிவேலைக்கு கொண்டு வந்ததா என்ற குழப்பம் போலீசாரிடம் ஏற்பட்டுள்ளது. வெடிவிபத்திற்கும் மாவோயிஸ்ட்டுகளுக்கும் தொடர்பு உள்ளதா என்பதை அறிய, தீவிரவாதிகள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையிலான குழுவினரும், டி.எஸ்.பி., ஜெயராமன் தலைமையில் கியூ பிரிவினரும், மத்திய புலனாய்வு பிரிவினரும் (ஐ.பி.,) தேவாரம் பகுதியில் முகாமிட்டுள்ளனர். கான்பூர் ராணுவ தளவாட தொழிற்சாலை சென்ற தனிப்பிரிவு போலீசார் கொடுக்கும் தகவலை வைத்து, அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.