ADDED : ஜூலை 27, 2011 01:23 AM
நாமக்கல்: நாமக்கல் அடுத்த அய்யம்பாளையம் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில், கிராம கல்விக்குழு கூட்டம் மற்றும் இலவச சீருடை, நோட்டு புத்தகம் வழங்கும் விழா நடந்தது.
பஞ்சாயத்து தலைவர் புஷ்பலதா தலைமை வகித்தார். பள்ளி தலைமையாசிரியர் நாமகிரி வரவேற்றார். வி.ஏ.ஓ., சுந்தரமூர்த்தி முன்னிலை வகித்தார். விழாவில், 12 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இலவச சீருடை, நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், கிராமக் கல்விக்குழு நிர்வாகிகள் கண்ணன், குணசேகரன், ரவி, பாலசுப்ரமணி, ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.