கள்ளச்சாராயம் விற்பனையில் 25 ஆண்டுகள் அனுபவம் : ஆனால் ஒரு தடவை கூட டேஸ்ட் பார்த்ததில்லை: கண்ணுகுட்டி வாக்குமூலம்
கள்ளச்சாராயம் விற்பனையில் 25 ஆண்டுகள் அனுபவம் : ஆனால் ஒரு தடவை கூட டேஸ்ட் பார்த்ததில்லை: கண்ணுகுட்டி வாக்குமூலம்
கள்ளச்சாராயம் விற்பனையில் 25 ஆண்டுகள் அனுபவம் : ஆனால் ஒரு தடவை கூட டேஸ்ட் பார்த்ததில்லை: கண்ணுகுட்டி வாக்குமூலம்
UPDATED : ஜூன் 21, 2024 09:11 PM
ADDED : ஜூன் 21, 2024 08:09 PM

கள்ளக்குறிச்சி: கள்ளச்சாரயம் குடித்து 50 க்கும் மேற்பட்டோர் பலியான சம்பவத்தில் கைது செய்யப்பட்ட கண்ணுகுட்டி 25 ஆண்டு விற்பனை அனுபவம் இருந்தாலும் கள்ளச்சாராயத்தை நான் டேஸ்ட் பார்த்ததில்லை என போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்து உள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் குடித்தாக 185 பேரில் 135 பேர்கள் பல்வேறு நகரத்தின் மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மீதமுள்ளவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கள்ளக்குறிச்சி மருத்துவமனையில் 85 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் 27 பேர் பலியாகி உள்ளனர். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 17 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 3 பேர் பலியாகி உள்ளனர். சேலம் மருத்துவமனையில் 21 பேர் சிகிச்சைபெற்று வரும்நிலையில் 16 பேர் பலியாகி உள்ளனர். விழுப்புரம் மருத்துவமனையில் 4 பேர் பலியாகி உள்ளனர். இதன் அடிப்படையில் பலி எண்ணிக்கை 50 ஐ தாண்டியது.
இதனிடையே கள்ளச்சாரயம் விற்பனை செய்ததாக கண்ணுகுட்டி என்ற கோவிந்தராஜ் , அவரது மனைவி விஜயா, கண்ணுகுட்டி தம்பி தாமோதரன் உள்ளிட்ட எட்டு பேர் வரையில் கைது செய்யப்பட்டு உள்ளனர். போலீசார் விசாரணையில் தன் மீது ஏற்கனவே 70க்
கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது. 25 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் விற்பனை செய்து வருவதாகவும் ஒரு சொட்டு சாராயம் கூட குடித்தது இல்லை டேஸ்ட் பார்ப்பது எல்லாம் தம்பி தான் என வாக்குமூலம் அளித்துள்ளார்.
மேலும் இருவர் கைது
கள்ளச்சாராய உயிரிழப்புக்கள் தொடர்பாக மரக்காணம் மதன்குமார், கள்ளக்குறிச்சி ரங்கநாதபுரத்தை சேர்ந்த சகுந்தலா ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். இருவரையும் சேர்த்து கைதானவர்களின் எண்ணிக்கை 10 ஆகி அதிகரித்துள்ளது.