‛சாகச ரீல்ஸ்' வீடியோ போட்ட காதல் ஜோடிக்கு போலீஸ் போட்டது காப்பு
‛சாகச ரீல்ஸ்' வீடியோ போட்ட காதல் ஜோடிக்கு போலீஸ் போட்டது காப்பு
‛சாகச ரீல்ஸ்' வீடியோ போட்ட காதல் ஜோடிக்கு போலீஸ் போட்டது காப்பு
ADDED : ஜூன் 21, 2024 08:44 PM

புனே: மஹாராஷ்டிராவில் கோயில் ஒன்றின் வளாகத்தில் பழைய கட்டட மேற்கூரையில் சாகச ரீல்ஸ் வீடியோ வெளியிட்ட காதல் ஜோடியை போலீசார் கைது செய்தனர். வீடியோ எடுத்த நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
மஹாராஷ்டிரா மாநிலம் புனே நகரைச் சேர்ந்தவர் மஹிர்காந்தி, 27 இவரது தோழி மீனாட்சி சலோன்கே 23, இருவரும் புனே நகரில் சுவாமி நாராயண் என்ற கோயில் வளாகத்தில் பழமையான கைவிடப்பட்ட கட்டடத்தின் உச்சிப்பகுதிக்கு சென்றனர். அங்கு காதலன் தன் காதலியின் ஒரு கையை பிடித்து அந்தரத்தில் தொங்கவிட்டவாறு சாகச ரீல்ஸ் வீடியோ எடுத்து இன்ஸ்டாகிராம் பதிவேற்றினர். இது இணையதளத்தில் வைரலானது.
பார்தி வித்யாபீட போலீஸ் நிலைய போலீசார் காதல் ஜோடி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். ரீல்ஸ் வீடியோ எடுத்த நபர் தலைமறைவானதால், அவரை வலைவீசி தேடி வருகின்றனர்.