/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் : மத்திய இணை அமைச்சர் முருகன் கருத்து தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் : மத்திய இணை அமைச்சர் முருகன் கருத்து
தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் : மத்திய இணை அமைச்சர் முருகன் கருத்து
தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் : மத்திய இணை அமைச்சர் முருகன் கருத்து
தமிழக மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் : மத்திய இணை அமைச்சர் முருகன் கருத்து
UPDATED : ஜூன் 21, 2024 10:19 PM
ADDED : ஜூன் 21, 2024 08:58 PM

ஊட்டி : 'மாநிலத்தின் அனைத்து இடங்களிலும், கஞ்சா, போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது; மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது,' என, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், ஊட்டிக்கு வந்த மத்திய தகவல் ஒலிபரப்பு துறை இணை அமைச்சர் முருகன், வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த பின் பேசியதாவது:பிரதமர் மோடி நடந்து முடிந்த தேர்தலில் மூன்றாவது முறையாக வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்றுள்ளார்.
நான் தோல்வி அடைந்தாலும், மத்திய பிரதேசத்திலிருந்து ராஜ்யசபா உறுப்பினராக்கி மத்திய அமைச்சர் பதவி தந்துள்ளார். அவருக்கு, தமிழக மக்கள் சார்பாக, நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
சட்டசபை தேர்தலின் போது, டாஸ்மாக் மது கடையை மூடுவதாக கூறிய தி.மு.க., கள்ள சாராயத்தை திறந்து விட்டு, கள்ளக்குறிச்சியில் அப்பாவிகளின் உயிர் பறிபோக காரணமாகி உள்ளது. மாநிலத்தின் அனைத்து இடங்களிலும், கஞ்சா, போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்துள்ளது. இதனால், மாநில மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. நான் தேர்தல் நேரத்தில் கூறியது போல, ஊட்டியை சர்வதேச அளவில் சிறந்த சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுப்பேன். நீலகிரி தேயிலைக்கு குறைந்தபட்ச விலை கிடைக்கவும், படுகர் மக்களை மலைவாழ் பட்டியல் சேர்க்கவும் நடவடிக்கை எடுப்பேன்.
தற்போது, நீலகிரி லோக்சபா தொகுதியில் இருந்து வெற்றி பெற்றுள்ள எம்.பி., மீதான, 2ஜி வழக்கு டெல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது. அதன் முடிவு குறித்து நான் சொல்ல தேவை இல்லை; உங்களுக்கே தெரியும். எனக்கு ஓட்டளித்த நீலகிரி மக்களுக்கு பாசம், நேசத்துடன் நன்றி கூறுகிறேன். இங்கு தாமரை மலர்ந்தே தீரும். இவ்வாறு அவர் பேசினார்.