தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை
தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை
தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை
UPDATED : ஜூன் 21, 2024 09:33 PM
ADDED : ஜூன் 21, 2024 09:10 PM

துஷான்பே: தஜிகிஸ்தான் நாட்டில் பெண்கள் ‛‛ஹிஜாப்'' அணிய தடை விதிக்கும் மசோதாவை கொண்டு வந்து அமல்படுத்தியுள்ளது.
மத்திய ஆசிய நாடான தஜிஸ்தான் அதிபராக இமோமாலின் ரஹ்மோம் உள்ளார். இந்நாட்டில் 96 சதவீத இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அந்நாட்டில் பெண்கள் ஹிஜாப் அணிய தடை , முக்கிய பண்டிகைகள் கொண்டாட தடை உள்ளிட்ட பல்வேறு மசோதாக்களுக்கு அரசு ஒப்புதல் அளித்தது.
பின் பாராளுமன்ற சபைகளிலும் மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து சட்டம் அமல்படுத்தப்பட்டது. இச்சட்டத்தின்படி பெண்கள் ஹிஜாப் அணிந்தால் அபராதம் விதித்தும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.