பிரான்ஸ் பத்திரிகையாளர் கட்டாயப்படுத்தி வெளியேற்றமா?: மத்திய அரசு மறுப்பு
பிரான்ஸ் பத்திரிகையாளர் கட்டாயப்படுத்தி வெளியேற்றமா?: மத்திய அரசு மறுப்பு
பிரான்ஸ் பத்திரிகையாளர் கட்டாயப்படுத்தி வெளியேற்றமா?: மத்திய அரசு மறுப்பு
ADDED : ஜூன் 21, 2024 07:59 PM

புதுடில்லி: இந்தியாவில் பணியாற்றி வரும் பிரான்ஸ் நாட்டு பத்திரிகையாளர் செபஸ்டின் பார்சிஸ் தான் கட்டாயப்படுத்தி நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டதாக கூறிய குற்றச்சாட்டிற்கு வெளியுறவு அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த செபஸ்டின் பார்சிஸ், இவர் ரேடியோ பிரான்ஸ் இன்டர்நேஷனல், பிரான்ஸ், மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளின் செய்தி நிறுவனங்களின் பத்திரிகையாளராக கடந்த 2011ம் ஆண்டு முதல் இந்தியாவில் பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இவரது அயலக பத்திரிகையாளருக்கான கால அவகாசம் இந்தியாவில் பணியாற்றுவதற்கான விசா காலம் முடிந்த நிலையில் மீண்டும் தனது பணியை புதுப்பிக்க கோரி கடந்த மே மாதம் மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு செபடிஸ் பார்சிஸ் விண்ணப்பம் செய்ததாக கூறப்படுகிறது.
இதற்கு கால அவகாசத்தை நீட்டிக்க மறுத்து, அவரை நாட்டை விட்டு வெளியேற நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து தனது ‛எக்ஸ்' வலைதளத்தில் செபஸ்டின் பார்சிஸ் கூறியது, கடந்த 13 ஆண்டுகள் இந்தியாவில் பணியாற்றி வந்த நான் உரிய காரணமின்றி கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட்டேன் என குற்றம்சாட்டினார்.
இது குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் ரன்தீர் ஜெய்ஷ்வால் கூறியது, செபஸ்டின் பார்சிஸ் குற்றச்சாட்டில் உண்மையில்லை. அவரது மனு மறு பரிசீலனையில் உள்ளது. உரிய விசாரணைக்கு பின்னரே அனுமதி அளிக்கப்படும் என்றார்.