Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/மணல் எடுப்பதை தடை செய்யக்கோரி தாணிக்கோட்டம் மக்கள் சாலைமறியல்

மணல் எடுப்பதை தடை செய்யக்கோரி தாணிக்கோட்டம் மக்கள் சாலைமறியல்

மணல் எடுப்பதை தடை செய்யக்கோரி தாணிக்கோட்டம் மக்கள் சாலைமறியல்

மணல் எடுப்பதை தடை செய்யக்கோரி தாணிக்கோட்டம் மக்கள் சாலைமறியல்

ADDED : செப் 03, 2011 12:32 AM


Google News

வேதாரண்யம்: வேதாரண்யம் அடுத்த தாணிக்கோட்டத்தில் உள்ள குமார் மகன் தமிழ்மணி (6), சேகர் மகன் செடில்ராஜ் (9) நேற்று முன்தினம் இரவு இளங்கோவனுக்கு சொந்தமான குட்டையில் இருவரும் விழுந்து நீரில் மூழ்கி இறந்தனர்.

இது குறித்து வாய்மேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கும்பராஜா விசாரணை நடத்தி வருகிறார். நேற்று காலை தாணிக்கோட்டகம் பகுதியில் முறைகேடாக அனுமதியின்றி மணல் எடுப்பதால் தான் இது போன்ற விபத்து நடக்கிறது. எனவே, இந்த பகுதியில் மணல் எடுப்பதை தடை செய்ய கோரி கிராம மக்கள் தாணிக்கோட்டகம் கடைத் தெருவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



இதையறிந்த வேதாரண்யம் தாசில்தார் அசோகன் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் வாய்மேடு போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியிலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதை தொடர்ந்து தாணிக்கோட்டகம் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அனுமதியின்றி மணல் எடுப்பது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து சாலை மறியல் விளக்கி கொள்ளப்பட்டது. இதனால், திருத்துறைப்பூண்டி- வேதை சாலையில் மூன்று மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நீரில் மூழ்கி இறந்த தமிழ்மணி, செடில்ராஜ் குடும்பத்தினரை வேதை எம்.எல்.ஏ., காமராஜ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us