உலகின் மிகவும் ஆபத்தான நகரம்: அதிபர் டிரம்ப் சொல்வது இதுதான்!
உலகின் மிகவும் ஆபத்தான நகரம்: அதிபர் டிரம்ப் சொல்வது இதுதான்!
உலகின் மிகவும் ஆபத்தான நகரம்: அதிபர் டிரம்ப் சொல்வது இதுதான்!
ADDED : செப் 02, 2025 08:55 PM

வாஷிங்டன்: சிகாகோ உலகின் மிகவும் ஆபத்தான நகரம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்தார்.
இது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சிகாகோவில் 54 பேர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில், எட்டு பேர் கொல்லப்பட்டனர். இதுவரை சிகாகோ உலகின் மிக மோசமான மற்றும் மிகவும் ஆபத்தான நகரம்.
வாஷிங்டன்னில் நான் செய்தது போல் குற்றப் பிரச்னையை சிகாகோவில் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன். குற்றப்பிரச்னையை விரைவாகத் தீர்ப்பேன். விரைவில் சிகாகோ மீண்டும் பாதுகாப்பாக இருக்கும், அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக ஆக்க வேண்டும். இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.
காரணம் என்ன?
சமீப காலமாக சிகாகோ நகரில் கொலை குற்றங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. இந்த நகரத்தில் சட்டவிரோத குடியேற்றமும் நடந்து வருகிறது. இதனால் டிரம்ப் தனது கட்டுப்பாட்டில் இந்த நகரத்தை கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தார். இந்த சூழலில் தான் இந்த நகரத்தில் மீண்டும் அமைதியை கொண்டு வருவோம் என்று டிரம்ப் கூறியிருக்கிறார்.
3வது பெரிய நகரம்
அமெரிக்காவின் இலினொய் மாகாணத்தில் சிகாகோ உள்ளது. மக்கள்தொகையில், நியூயார்க், லாஸ் ஏஞ்சலஸ் ஆகிய நகரங்களை அடுத்து, சுமார் 3 மில்லியன் மக்கள்தொகையுடன் அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகராக விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.