/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/ மாதாவிற்கு மகுடம் சூட்டல்; திரளான பக்தர்கள் பங்கேற்பு மாதாவிற்கு மகுடம் சூட்டல்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
மாதாவிற்கு மகுடம் சூட்டல்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
மாதாவிற்கு மகுடம் சூட்டல்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
மாதாவிற்கு மகுடம் சூட்டல்; திரளான பக்தர்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 01, 2024 07:28 AM

நாகப்பட்டினம் : நாகை அடுத்த வேளாங்கண்ணி, ஆரோக்கிய மாதா சர்ச்சில், மாதாவிற்கு மகுடம் சூட்டும் நிகழ்ச்சி நடந்தது.
பழைய மாதா கோவிலில், தஞ்சை மறைமாவட்ட பரிபாலகர் சகாயராஜ் தலைமையில், 25க்கும் மேற்பட்ட பாதிரியார்கள் பங்கேற்ற கூட்டு பாடல் திருப்பலிக்கு பின், மின்னொளியில் ஜொலித்த தேரில் எழுந்தருளிய ஆரோக்கிய மாதாவிற்கு, வைர கற்கள் பதிக்கப்பட்ட தங்கத்திலான மகுடம் சூட்டப்பட்டது.
தொடர்ந்து திருத்தேர் பவனி, புனித பாதை வழியாக தேவாலயத்தை வந்தடைந்தது.
தேர் பவனியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பக்தர்கள், கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி, திருத்தேரின் மீது பூக்களை தூவி பங்கேற்றனர்.