ADDED : ஆக 13, 2011 01:26 AM
குற்றாலம் : குற்றால அருவிகளில் நேற்று தண்ணீரும், சுற்றுலா பயணிகளின்
வருகையும் குறைந்து காணப்பட்டது.
குற்றாலத்தில் கடந்த நான்கு நாட்களாக
வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டதால் மெயினருவி, ஐந்தருவி,
புலியருவி, பழைய குற்றால அருவிகளில் நேற்று தண்ணீர் வரத்து சற்று குறைந்து
காணப்பட்டது. சுற்றுலா பயணிகள் வருகையும் குறைந்து காணப்பட்டது. சுற்று
வட்டார பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் கூட்டம்தான் அதிகளவில் இருந்தது.
நேற்று அதிகாலை முதல் மாலை 4 மணி வரை குற்றாலம் பகுதியில் வெயிலின் தாக்கம்
இருந்து வந்தது. அதன்பிறகு இதயத்திற்கு இதமாக குளிர்ந்த தென்றல் காற்று
வீசியது சுற்றுலா பயணிகளுக்கு ஆறுதலாக இருந்தது.


