தனித்துப் போட்டியிட தே.மு.தி.க., தயங்காது: 2026 தேர்தல் கூட்டணி பற்றி பிரேமலதா கருத்து
தனித்துப் போட்டியிட தே.மு.தி.க., தயங்காது: 2026 தேர்தல் கூட்டணி பற்றி பிரேமலதா கருத்து
தனித்துப் போட்டியிட தே.மு.தி.க., தயங்காது: 2026 தேர்தல் கூட்டணி பற்றி பிரேமலதா கருத்து
ADDED : ஜூன் 11, 2025 02:31 PM

சென்னை: அடுத்தாண்டு சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க., தனித்துப் போட்டியிடவும் தயங்காது என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறி உள்ளார்.
சென்னையில் கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள், மண்டல பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்களிடையே ஆலோசனைக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
அப்போது பிரேமலதா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது;
தனித்துப் போட்டியிடுமா தே.மு.தி.க., என்பதுதான் உங்கள் கேள்வி. அதை நிரூபித்தவர் விஜயகாந்த். எனவே தனித்துப் போட்டியா, கூட்டணி வைத்து போட்டியா என்பதை இன்றைக்கு நான் சொல்ல முடியாது.
நிச்சயமாக அதற்கான சந்தர்ப்பங்கள் வந்தால் தனித்து போட்டியிடவும் தே.மு.தி.க., தயங்காது. அதை முன் உதாரணமாக கொண்டு விஜய் இனிமேல் தெரிவிக்க வேண்டும். இதற்கு மேல் நாங்கள் தனித்து போட்டியா? கூட்டணி அமைத்து போட்டியா? என்பதை இன்றைக்கு சொல்ல முடியாது.
தனித்துப் போட்டியா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். எத்தனையோ இடைத்தேர்தல்களை தனியாக கண்டவர்கள். 5 பார்லிமெண்ட் தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் அறிவிக்கப்பட்ட போது ராஜ்யசபாவும் அறிவிக்கப்பட்ட ஒன்று தான்.
ஆனால் வருஷம் அதில் குறிப்பிடவில்லை. அப்போது நாங்கள் வருஷம் குறிப்பிடுங்கள் என்று கேட்டோம். அவர்கள்(அ.தி.மு.க.,) வருஷம் குறிப்பிடுவது வழக்கத்தில் இல்லை என்று எடப்பாடி கூறினார்.
வார்த்தை மாற மாட்டோம் என்ற உறுதியையும் அவர் கொடுத்தார். பொறுத்தார் பூமி ஆள்வார். நிச்சயமாக அதற்கான காலம் வரும். கட்சியை வலுப்படுத்த தமிழகம் முழுவதும், நானும், விஜய பிரபாகரனும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறோம். ஜன.,9 ம் தேதி கடலூரில் மாநாடு நடக்கிறது. அதன் பின்னர் தேர்தல் பணிகள் முழுவீச்சில் ஆரம்பிக்கப்படும்.
எனவே இந்த நிமிஷமே யாருடன் கூட்டணி என்பதை தெரிவிக்க முடியாது. வெகு விரைவிலே அதற்கான நேரம் வரும் போது அதை அறிவிக்கிறோம். அ..தி.மு.க., அவர்கள் நிலைப்பாட்டை கூறி உள்ளனர். அதை வரவேற்கிறோம். எங்கள் நிலைப்பாட்டை நேரம் வரும் போது எடுத்து சொல்கிறோம். அதுவரை எங்கள் கட்சி வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்துகிறோம்.
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைந்தால் அது வரவேற்கத்தக்க விஷயம். ராஜ்யசபா சீட் விவகாரத்தில் அவர் (எடப்பாடி) தான் எழுதி (ஒப்பந்தம்) கையெழுத்திட்டு கொடுத்தார்.
ஆனால் அவரோ தே.மு.தி.க.,வுக்கு எப்போது சீட் என்று சொன்னோம், யார் சொன்னோம் யார் யாரோ சொன்னதற்கு எல்லாம் நாங்கள் எப்படி பொறுப்பாக முடியும் என்றார். ஆனால் அதை பெரிதுபடுத்த வேண்டாம் என்று அ.தி.மு.க., முன்னணி நிர்வாகிள் எங்களிடம் போனில் பேசினர்.
இவ்வாறு அவர் கூறினார்.