Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ஜீப் கவிழ்ந்து சிறுமி பலி

ஜீப் கவிழ்ந்து சிறுமி பலி

ஜீப் கவிழ்ந்து சிறுமி பலி

ஜீப் கவிழ்ந்து சிறுமி பலி

ADDED : ஜூலை 28, 2011 10:08 PM


Google News
பந்தலூர் : பந்தலூர் அருகே நெலாக்கோட்டை பகுதியில் ஜீப் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி பலியானார்.

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே பாட்டவயல் பகுதியில் இருந்து தேவர்சோலை நோக்கி நேற்று மாலை 6.30 மணியளவில் தனியார் ஜீப் ஒன்று(டிஎன்-28, டி-1213) ஆட்களை ஏற்றி சென்றுள்ளது. அப்போது நெலாக்கோட்டை அருகே 9வது மைல் என்ற இடத்தில் வேகமாக வந்த ஜீப் சாலையில் கவிழ்ந்தது. ஜீப்பில் பயணம் செய்த பாட்டவயல் ஈட்டிமூலா பகுதியை சேர்ந்த சியாபூ என்பவரின் மகள் ரிசானடெஸ்மி(9) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், ஜீப்பில் பயணம் செய்த 8க்கும் மேற்பட்டோர் கூடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நெலாக்கோட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us