ADDED : ஜூலை 11, 2011 02:52 AM
தர்மபுரி: பாலக்கோடு அரிமா சங்கம் சார்பில், பாலக்கோடு வித்யா மந்திர்
மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நேற்று இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது.
ஸ்டேட் பேங்க் மேலாளர் அன்பழகன் முகாமை துவக்கி வைத்தார். டாக்டர்
ரவிச்சந்திரன், சங்கத் தலைவர் கோவிந்தராஜ், நிர்வாகிகள் மாறன், சிவசண்முகம்
ஆகியோர் கலந்துகொண்டனர்.நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு கண் சம்பந்தமான
நோய்கள் குறித்து பரிசோதனை செய்யப்பட்டு கண்புரை அறுவைச் சிகிச்சைக்கு
அழைத்து செல்லப்பட்டனர். 50க்கும் மேற்பட்டவர்களுக்கு மாத்திரை மற்றும்
சிகிச்சை அளிக்கப்பட்டது.