சிறையிலடைக்கப்பட்ட கோவா எம்.எல்.ஏ.வுக்கு நெஞ்சுவலி
சிறையிலடைக்கப்பட்ட கோவா எம்.எல்.ஏ.வுக்கு நெஞ்சுவலி
சிறையிலடைக்கப்பட்ட கோவா எம்.எல்.ஏ.வுக்கு நெஞ்சுவலி
ADDED : அக் 06, 2011 12:31 PM
பானாஜி: கோவா மாநிலத்தில் அரசு இன்ஜினியர்ஒருவரை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட எம்.எல்.ஏ.க்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கோவா மாநிலத்தில் கடந்த 2007-ம் ஆண்டு கபில்நடேகர் என்ற மின்வாரியத்துறை இன்ஜினியரை தாக்கியதாக எம்.எல். ஏ . மீது புகார் கூறப்பட்டதன் பேரில் இது தொடர்பாக மார்கோ செஷன்ஸ் கோர்டில் வழக்கு நடந்தது. இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. பச்சிகோ என்பவர் நேற்று போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இவருக்கு திடீரென ரத்த அழுத்தம் ஏற்பட்டு தமக்கு நெஞ்சலி ஏற்படுவதாக கூறினார். இதைத்தொடர்ந்து பச்சிகோ , பானாஜி அரசு மருரத்துக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை டாக்டர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.


