Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/புதர் மண்டிய நிலையில் வரத்து கால்வாய்கள் : வீடுகளில் புகும் வெள்ளம்

புதர் மண்டிய நிலையில் வரத்து கால்வாய்கள் : வீடுகளில் புகும் வெள்ளம்

புதர் மண்டிய நிலையில் வரத்து கால்வாய்கள் : வீடுகளில் புகும் வெள்ளம்

புதர் மண்டிய நிலையில் வரத்து கால்வாய்கள் : வீடுகளில் புகும் வெள்ளம்

ADDED : ஆக 02, 2011 11:31 PM


Google News

ஸ்ரீவில்லிபுத்தூர் : ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய குளம் கண்மாயிலிருந்து அத்திகுளத்திற்கு செல்லும் கால்வாயில் புதர் மண்டி ,வெள்ளம் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய குளம் கண்மாய் நிறைந்து மறுகால் பாயும் வெள்ளம் சந்தைய கிணற்று கால்வாய் , ரயில்பீடர் ரோடு கால்வாய் வழியாக அத்திக்குளம் கண்மாய்க்கு செல்கிறது. இக்கால்வாய் ஆக்கிரமிப்பால் நாளுக்கு நாள் சுருங்கி வருகிறது. நகராட்சி பகுதி வீடுகளின் கழிவு நீர் இந்த கால்வாயில் சேர்வதால் கடுமையான துர்நாற்றத்துடன் காணப்படுகிறது. இக்கால்வாயில் முட்புதர்கள், கொடி பூவரசு செடிகள் வளர்ந்து தண்ணீர் செல்வதை தடுக்கிறது. இதனால் கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி கடும் சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. மழைக்காலங்களில் வெள்ளம் வரும் போது புதர்களில் குப்பைகள் அடைத்து தண்ணீர் ஓட்டத்தை தடுப்பதால், தண்ணீர் வீடுகளினுள் புகுந்து சேதத்தை ஏற்படுத்துகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பெய்த மழையில் ரயில்வே பீடர் ரோட்டில் 15 வீடுகளில் மழை நீர் புகுந்து சேதத்தை விளைவித்தது. பொதுப்பணித்துறையினர் சந்தைய கிணற்று தெரு முதல் ரயில்வே பீடர் ரோடு வரையிலான கால்வாயில் வளர்ந்துள்ள முட்புதர்களை அகற்றி ஆழப்படுத்தி, வரும் காலங்களில் தண்ணீர் தடைபடாமல் செல்ல வழி செய்ய வேண்டும்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us