திகார் சிறையில் கெஜ்ரிவாலை கைது செய்தது சி.பி.ஐ.,
திகார் சிறையில் கெஜ்ரிவாலை கைது செய்தது சி.பி.ஐ.,
திகார் சிறையில் கெஜ்ரிவாலை கைது செய்தது சி.பி.ஐ.,
UPDATED : ஜூன் 25, 2024 10:41 PM
ADDED : ஜூன் 25, 2024 10:31 PM

புதுடில்லி: மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையை அடுத்து இன்று சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்து கெஜ்ரிவாலை கைது செய்தது.
மதுபான கொள்கை வழக்கில் நடந்த முறைகேட்டினை அமலாக்கத்துறை, மற்றும் சி.பி.ஐ. விசாரித்து வருகிறது.இதில் நடந்த பண மோசடி வழக்கில் டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து கடந்த மாதம் கைது செய்தது. கெஜ்ரிவால் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.
வழக்கு ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நடந்து வருகிறது. இதில் அவரது ஜாமின் மனுவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் ஏற்கனவே சி.பி.ஐ., வழக்குப்பதிவு செய்திருந்த நிலையில் இந்த வழக்கில் இன்று திகார் சிறை சென்ற சி.பி.ஐ, அவரை கைது செய்தது.
முன்னதாக நேற்று சி.பி.ஐ., கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தியுள்ளதாகவும் விசாரணை முடிந்த நிலையில் இன்று சிறையில் வைத்த கைது செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.டில்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவாலை நாளை ஆஜர்படுத்த சி.பி.ஐ., திட்டமிட்டுள்ளது.