/உள்ளூர் செய்திகள்/திருச்சி/கார் மோதி சிறுவன் பலி பஞ்சப்பூரில் சாலை மறியல்கார் மோதி சிறுவன் பலி பஞ்சப்பூரில் சாலை மறியல்
கார் மோதி சிறுவன் பலி பஞ்சப்பூரில் சாலை மறியல்
கார் மோதி சிறுவன் பலி பஞ்சப்பூரில் சாலை மறியல்
கார் மோதி சிறுவன் பலி பஞ்சப்பூரில் சாலை மறியல்
ADDED : செப் 06, 2011 12:02 AM
திருச்சி: பஞ்சப்பூர் அருகே சாலையை கடந்த சிறுவன் மீது கார் மோதியதில், அச்சிறுவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான்.
புதுக்கோட்டையை சேர்ந்த சக்திவேல் மகன் முனியமுத்து (8). திருச்சி, பஞ்சப்பூரில் இவரது பாட்டி தேவி உள்ளார். பாட்டி வீட்டுக்கு முனியமுத்து வந்தார். பாட்டிக்கு திடீரென உடல் நலகுறைவு ஏற்பட்டது. இதையடுத்து, இருவரும் மருந்து வாங்குவதுக்காக பஞ்சப்பூர் சாலையை கடந்து சென்றனர். மருந்து வாங்கி விட்டு சாலையை கடந்து வரும்போது, மதுரையிலிருந்து திருச்சி நோக்கி வந்த அம்பாஸிட்டர் கார் மோதியதில் சம்பவ இடத்தில் முனியமுத்து இறந்தார். காரை நிறுத்திவிட்டு டிரைவர் தப்பியோடினார். விபத்தில் சிறுவன் பலியானதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. விபத்து குறித்து மாநகர தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.