/உள்ளூர் செய்திகள்/தேனி/முல்லைப்பெரியாறு அணையில் மத்தியக்குழு இரண்டாம் கட்ட ஆய்வுமுல்லைப்பெரியாறு அணையில் மத்தியக்குழு இரண்டாம் கட்ட ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையில் மத்தியக்குழு இரண்டாம் கட்ட ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையில் மத்தியக்குழு இரண்டாம் கட்ட ஆய்வு
முல்லைப்பெரியாறு அணையில் மத்தியக்குழு இரண்டாம் கட்ட ஆய்வு
ADDED : ஆக 16, 2011 11:40 PM
கூடலூர் : முல்லைப்பெரியாறு அணையில் மத்திய நீர் மற்றும் மின் உற்பத்தி ஆராய்ச்சி நிலைய பொறியாளர் குழு நேற்று இரண்டாம் கட்ட ஆய்வு நடத்தியது.முல்லைப்பெரியாறு அணையின் பலத்தை சோதிக்கும் வகையில், சுப்ரீம் கோர்ட் பரிந்துரையின்படி ஐவர் குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர்.மெயின் அணை, பேபி அணையில் ஆழ்துளை கிணறு அமைத்து அங்கிருந்து மாதிரி எடுத்து பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டது.
ஆனால், அணையில் ஆழ்துளை கிணறு அமைப்பதன்மூலம் அணைக்கு ஏதேனும் பிரச்னை ஏற்படுமா என மத்திய குழுவினரிடமிருந்து கருத்து தெரிவிக்கப்பட்டது.அணையில் சாம்பிள் எடுத்து பரிசோதனை நடத்தியே தீர வேண்டும் என கேரள அரசு கேட்டதால்,நேற்று மத்திய நீர் மற்றும் மின்உற்பத்தி ஆராய்ச்சி நிலைய தலைமை தொழில்நுட்ப அதிகாரி முஸ்தாக் அணைப்பகுதிக்கு வந்தார்.மெயின் அணையில் ஐந்து இடத்திலும், பேபி அணையில் ஒரு இடத்திலும், அணையின் பின் பகுதியில் சரிவான இடத்தில் இரண்டு இடத்திலும் சாம்பிள் எடுக்க அடையாளம் செய்யப்பட்டது. மத்தியக்குழுவிடம் அறிக்கை சமர்ப்பித்த பின், அணையில் சாம்பிள் எடுப்பதற்காக தொழில் நுட்ப குழு அணைப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்படும்.