ரூ. 32 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரி பாக்கி: இன்போசிஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்
ரூ. 32 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரி பாக்கி: இன்போசிஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்
ரூ. 32 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரி பாக்கி: இன்போசிஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ்
ADDED : ஜூலை 31, 2024 09:25 PM

புதுடில்லி: ரூ. 32 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரி பாக்கி வைத்துள்ளதாக எழுந்த புகாரில் இன்போசிஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவை சேர்ந்த முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் மென்பொருள் நிறுவனம் பல்வேறு நாடுகளில் உள்ள பெரு நகரங்கள், பிரிட்டிஷ் கொலம்பியாவின் புர்னபே நகரிலும், கிளைகளை கொண்டு உள்ளன.
இந்நிலையில் இந்நிறுவனம் கடந்த 2017- 2022 ஆகிய ஐந்தாண்டுகளில் ரூ. 32 ஆயிரம் கோடி ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து வரிபாக்கியை செலுத்துமாறு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.