/உள்ளூர் செய்திகள்/புதுக்கோட்டை/உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் வழங்கலாம் : புதுகை அ.தி.மு.க., அழைப்புஉள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் வழங்கலாம் : புதுகை அ.தி.மு.க., அழைப்பு
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் வழங்கலாம் : புதுகை அ.தி.மு.க., அழைப்பு
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் வழங்கலாம் : புதுகை அ.தி.மு.க., அழைப்பு
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கள் வழங்கலாம் : புதுகை அ.தி.மு.க., அழைப்பு
ADDED : செப் 01, 2011 01:29 AM
புதுக்கோட்டை: 'புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்கள் நாளை (2ம் தேதி) முதல் 5ம் தேதி வரை விருப்ப மனுக்கள் தாக்கல் செய்யலாம்' என மாவட்டச் செயலாளர் ராமையா அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் அக்டோபர் முதல் வாரத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறுமாறு தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதனடிப்படையில் புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடமிருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட உள்ளது.
போட்டியிட விரும்புவோர் நாளை காலை 10 மணி முதல் ஐந்தாம் தேதி மாலை ஐந்துமணி வரை பழைய பஸ் ஸ்டான்ட் அருகில் உள்ள மாவட்ட அ.தி.மு.க., அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் ராமையாவிடம் விருப்ப மனுக்களை தாக்கல் செய்யலாம். நகராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் 10 ஆயிரம் ரூபாய், கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் 500 ரூபாய், மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர் பதவிக்கு போட்டயிட விரும்புபவர்கள் 5,000 ரூபாய், பஞ்சாயத்து யூனியன் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் 2,000 ரூபாய் வீதம் கட்டணம் செலுத்தவேண்டும். விருப்ப மனுக்களை குறிப்பிட்ட தேதிகளில் நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை ஐந்துமணி வரை தொடர்ந்து தாக்கல் செய்யலாம்.