Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலுக்கு புதிய "சாப்ட்வேர்'

உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலுக்கு புதிய "சாப்ட்வேர்'

உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலுக்கு புதிய "சாப்ட்வேர்'

உள்ளாட்சி தேர்தல் வாக்காளர் பட்டியலுக்கு புதிய "சாப்ட்வேர்'

ADDED : செப் 07, 2011 10:43 PM


Google News

சிவகங்கை : உள்ளாட்சி தேர்தலில் வாக்காளர் பட்டியல் தயாரிக்க, புதிய 'சாப்ட்வேரை' மாநில தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.அக்.,ல் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது.

இதற்காக வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பயிற்சி முகாம் சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து 34 ஊராட்சி ஒன்றிய 'கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர்கள்', தேர்தல் உதவியாளர்கள் பங்கேற்றனர்.சட்டசபை தேர்தலில் பயன்படுத்திய வாக்காளர் பட்டியலை பயன்படுத்தி, வார்டு வாரியாக வாக்காளர்களை பிரித்து புதிதாக வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்படும்.புதிதாக விண்ணப்பித்த வாக்காளர்களின் பெயர்களை சட்டசபை தொகுதிக்கு உட்பட்டு பிரிக்க புதிய 'சாப்ட்வேர்' தயாரித்துள்ளனர். இவற்றை பயன்படுத்துவது சம்பந்தமாக 'ஆன்லைன்' மூலம் தயாரிப்பது பற்றி பயிற்சி அளிக்கப்பட்டது.கலெக்டர் ராஜாராமன் பேசுகையில்: உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகளை விரைவுபடுத்த, அரசு உத்தரவிட்டுள்ளது. வாக்காளர் பட்டியலில் எவ்வித புகார்இன்றி பட்டியல் தயாரிக்க வேண்டும் என்றார்.திட்ட அலுவலர் சக்திவேல், தேர்தல் உதவியாளர் சர்புதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) அப்துல் சலீம், தேர்தல் பி.டி.ஓ., கணபதி பங்கேற்றனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us