ADDED : ஜூலை 19, 2011 12:24 AM
கிருஷ்ணகிரி : காவேரிப்பட்டணம் அருகே, அனுமதியின்றி மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸார் பறிமுதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.
காவேரிப்பட்டணம் இன்ஸ்பெக்டர் வெங்கடாசலம் மற்றும் போலீஸார் பென்னேஸ்வரமடம் அருகே, வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியே மணல் ஏற்றி வந்த டிராக்டரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையில் அனுமதியின்றி டிராக்டரில் மணல் கடத்தி வந்தது தெரியவந்து. போலீஸார் டிராக்டரை பறிமுதல் செய்து டிரைவர் மரிக்கான் சவுளூரை சேர்ந்த ஆனந்தராஜ்(24) என்பவரை கைது செய்தனர். டிராக்டர் உரிமையாளர் முனிராஜை போலீஸார் தேடி வருகின்றனர்.