/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேரோட்ட திருவிழாரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேரோட்ட திருவிழா
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேரோட்ட திருவிழா
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேரோட்ட திருவிழா
ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தேரோட்ட திருவிழா
ADDED : ஜூலை 13, 2011 12:58 AM
ரிஷிவந்தியம் : பிரசித்தி பெற்ற ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில்
தேரோட்டம் நேற்று நடந்தது.
ரிஷிவந்தியத்தில் 1,000 ஆண்டுகள் பழமையான
அர்த்தநாரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் பிரமோற்சவம் கடந்த 4ம் தேதி
கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏழாம் நாள் உற்சவமான கடந்த 10ம் தேதி இரவு
அர்த்தநாரீஸ்வரர் சுவாமிக்கும், முத்தாம்பிகை அம்மனுக்கும் திருக்கல்யாண
உற்சவம் நடந்தது. நேற்று முன்தினம் மான் வாகனத்தில் சுவாமி எழுந்தருளி
அய்யாயிரம் குளக்கரையில் சம்கார உற்சவம் நடந்தது. நேற்று பகல் 12.30
மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூர்த்திகள் புறப்பாடும், அதைத்தொடர்ந்து
கோவில் வாயிலில் மண்டகபடி நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் சுவாமி
அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து சிறப்பு ஆராதனைகள் நடந்தது. மதியம் 2.10
மணிக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.