/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மணல் லாரிகளில் வசூல் டிரைவர்கள் போராட்டம்மணல் லாரிகளில் வசூல் டிரைவர்கள் போராட்டம்
மணல் லாரிகளில் வசூல் டிரைவர்கள் போராட்டம்
மணல் லாரிகளில் வசூல் டிரைவர்கள் போராட்டம்
மணல் லாரிகளில் வசூல் டிரைவர்கள் போராட்டம்
ADDED : ஆக 26, 2011 01:02 AM
திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே மணல் லாரியை வழிமறித்து கட்டாய வசூல் செய்ததால் டிரைவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெண்ணெய்நல்லூர் அடுத்த மாரங்கியூரில் அரசு குவாரி செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு லாரிகளில் மணல் ஏற்றிச்செல்கின்றனர். மணல் ஏற்றிவரும் லாரிகளிடம் வழிநெடுகிலும் பணம் வசூலிப்பதால் டிரைவர்கள் அச்சத்துடன் செல்கின்றனர். நேற்று காலை 11.30 மணிக்கு மாரங்கியூரிலிருந்து மணல் ஏற்றி வந்த லாரியை சிறுவானூர் பஸ் நிறுத்தம் அருகே மறித்த சிலர் தங்கள் ஊர் கோவிலுக்கு பணம் கொடுக்க வலியுறுத்தினர். இதனால் அதிருப்தியடைந்த 20க்கும் மேற்பட்ட டிரைவர்கள் லாரிகளை நடுரோட்டில் நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் இப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த திருவெண்ணெய்நல்லூர் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் விரைந்து வந்து பணம் வசூலித்தவர்களை எச்சரித்தார். பின்னர் டிரைவர்கள் லாரிகளை ஓட்டிச் சென்றனர்.