விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளர் அறிவிப்பு
ADDED : ஜூன் 11, 2024 01:35 PM

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், தி.மு.க., சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுகிறார்.
விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., புகழேந்தி காலமானதைத் தொடர்ந்து, அந்த தொகுதிக்கு வரும் 10ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு நேற்று ( ஜூன் 10) வெளியானது.
இந்நிலையில் அந்த தொகுதியில் தி.மு.க., சார்பில் அன்னியூர் சிவா போட்டியிடுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தற்போது இவர், தி.மு.க., விவசாய அணிச் செயலாளர் ஆக உள்ளார்.