/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/கழிவுநீர் குட்டையாக மாறிய திண்டிவனம் வ.உ.சி., திடல்கழிவுநீர் குட்டையாக மாறிய திண்டிவனம் வ.உ.சி., திடல்
கழிவுநீர் குட்டையாக மாறிய திண்டிவனம் வ.உ.சி., திடல்
கழிவுநீர் குட்டையாக மாறிய திண்டிவனம் வ.உ.சி., திடல்
கழிவுநீர் குட்டையாக மாறிய திண்டிவனம் வ.உ.சி., திடல்
ADDED : ஆக 29, 2011 10:21 PM
திண்டிவனம் : திண்டிவனம் நகரின் மையப்பகுதியில் உள்ள வ.உ.சி., திடலை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திண்டிவனம் நகரில் அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டம் மற்றும் விழாக்கள் நகராட்சி அலுவலகம் எதிரே உள்ள காந்தி திடல் மற்றும் செஞ்சி சாலையில் உள்ள வ.உ.சி., திடலில்தான் நடைபெறுவது வழக்கம்.நகரின் மையப்பகுதியில் உள்ள இந்த திடல் சாலை மட்டத்தில் இருந்து தாழ்வாக இருப்பதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. இந்த திடலில் டவுன் பஸ்கள் வந்து திரும்புவதாலும், இதர வாகனங்களின் போக்குவரத்தாலும் தேங்கி நிற்கும் மழைநீர் சேறும், சகதியுமாக மாறிவிடுகிறது. தினந்தோறும் அவ்வழியே செல்லும் பள்ளி மாணவர்கள், பொதுமக்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.
பொது மக்களின் நலனை கருதி வ.உ.சி., திடலில் தேங்கி நிற்கு மழைநீரை அகற்றி, அப்பகுதியை சீரமைத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.