தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
தேசிய இளைஞர் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜூலை 24, 2011 11:43 PM
தேனி : தேசிய இளைஞர் விருது பெற தகுதியான இளைஞர்கள் மற்றும் தன்னார்வ
தொண்டு நிறுவனங்கள் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும்
ஜன., 12ல் விவேகானந்தர் பிறந்தநாளை முன்னிட்டு, மத்திய அரசு சார்பில் விழா
நடத்தப்படுகிறது. சமூக நலன் மற்றும் தேசிய வளர்ச்சிக்கான பணிகளை சிறப்பாக
செய்து வரும் இளைஞர்களுக்கும் (13 முதல் 35 வயது வரை), தன்னார்வ தொண்டு
நிறுவனங்களுக்கும் விழாவில், தேசிய இளைஞர் விருது வழங்கப்படுகிறது.
விருதுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட
விளையாட்டு அலுவலரிடம் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை,
ஜூலை 31க்குள், மாவட்ட விளையாட்டு அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இளைஞர்
விருதுக்கு தேர்வு செய்யப்படும் இளைஞர்களுக்கு (தனி நபர்) 40 ஆயிரம்
ரூபாயும், பட்டயம், பதக்கம் வழங்கப்படும். மாநிலத்தில் 10 பேருக்கு
வழங்கப்படுகிறது. தேர்வு செய்யப்படும் இரண்டு தன்னார்வ தொண்டு
நிறுவனங்களுக்கு தலா 2 லட்ச ரூபாயும், பட்டயம், வெற்றிச்சின்னம்
வழங்கப்படும்.


