தெலுங்கானா போராட்டத்தால் பணிக்கு வராத அமைச்சர்கள் : முதல்வர் கிரண்குமார் மட்டும் படுசுறுசுறுப்பு
தெலுங்கானா போராட்டத்தால் பணிக்கு வராத அமைச்சர்கள் : முதல்வர் கிரண்குமார் மட்டும் படுசுறுசுறுப்பு
தெலுங்கானா போராட்டத்தால் பணிக்கு வராத அமைச்சர்கள் : முதல்வர் கிரண்குமார் மட்டும் படுசுறுசுறுப்பு

ஐதராபாத் : ஆந்திராவில் தெலுங்கானா போராட்டம் தீவிரமடைந்துள்ளதால், பெரும்பாலான அமைச்சர்கள், தங்களது பணிகளைச் செய்யாமல் புறக்கணித்துள்ளனர்.
ஆந்திராவில், முதல்வர் கிரண் குமார் ரெட்டி உட்பட, 38 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில், 12 பேர் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்தவர்கள். கடந்த 15 நாட்களுக்கும் மேலாக, இவர்கள் அமைச்சரவை தொடர்பான பணிகளில் ஈடுபடாமல், புறக்கணித்து வருகின்றனர். கடலோர ஆந்திரா மற்றும் ராயல்சீமா பகுதியைச் சேர்ந்த அமைச்சர்களும், போராட்டத்தில் குதித்துள்ளனர். 'ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலம் வேண்டும்' என்ற கோரிக்கையை இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் முறையிடுவதற்காக, இவர்கள் டில்லியில் முகாமிட்டுள்ளனர்.
இதனால், மாநில நிர்வாகத்தின் ஒட்டு மொத்த பணிகளும் முடங்கியுள்ளன. அமைச்சரவை கூட்டங்கள் நடக்கவில்லை. பல்வேறு திட்டங்களும் முடங்கிப் போய் இருக்கின்றன. ஆனாலும், முதல்வர் கிரண் குமார் ரெட்டி, இதை பொருட்படுத்தாமல், தனது பணிகளில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். மத்திய அமைச்சர்கள் பிரணாப் முகர்ஜியில் துவங்கி, சுஷில் குமார் ஷிண்டே வரை, பலருக்கு கடிதங்கள் அனுப்பும் பணிகளில், முதல்வர் கிரண் குமார் ரெட்டி, தீவிரமாக ஈடுபட்டுள்ளார். குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளை அழைத்து, ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருகிறார். ஆந்திராவில் தற்போது நிகழும் இதுபோன்ற சம்பவங்கள், மிக வித்தியாசமாக இருப்பதாக, அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.