வெறுப்பை பரப்புகின்றனர்: பா.ஜ., மீது ராகுல் மீண்டும் சாடல்
வெறுப்பை பரப்புகின்றனர்: பா.ஜ., மீது ராகுல் மீண்டும் சாடல்
வெறுப்பை பரப்புகின்றனர்: பா.ஜ., மீது ராகுல் மீண்டும் சாடல்
UPDATED : ஜூலை 03, 2024 06:04 PM
ADDED : ஜூலை 03, 2024 04:13 PM

புதுடில்லி: 'வன்முறை மற்றும் வெறுப்பை பரப்பும் பா.ஜ.,வினர் ஹிந்து மதத்தின் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை' என காங்., எம்.பி ராகுல் தெரிவித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் ராகுல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: குஜராத் காங்கிரஸ் அலுவலகம் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான மற்றும் வன்முறைத் தாக்குதல், பா.ஜ.,மீதான எனது கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.
வன்முறை மற்றும் வெறுப்பை பரப்பும் பா.ஜ.,வினர் ஹிந்து மதத்தின் கொள்கைகளை புரிந்து கொள்ளவில்லை. அவர்களின் பொய்களை குஜராத் மக்கள் கவனித்து வருகின்றனர். பா.ஜ., அரசுக்கு தீர்க்கமான பாடம் புகட்டுவார்கள். குஜராத்தில் இண்டியா கூட்டணி வெல்லப் போகிறது என மீண்டும் சொல்கிறேன். இவ்வாறு ராகுல் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்பு, லோக்சபாவில் விவாதத்தின்போது எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசுகையில், ''பிரதமர் மோடி ஒட்டுமொத்த ஹிந்து மதத்தின் பிரதிநிதி அல்ல. பா.ஜ.,வின் ஹிந்துக்கள் வன்முறையாளர்கள்; உண்மையான ஹிந்துக்கள் அல்ல'' எனப் பேசினார். இதற்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பா.ஜ., தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர்.