/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/வேதாரண்யம் அருகே குட்டைக்குள் விழுந்து இரண்டு சிறுவர் பலிவேதாரண்யம் அருகே குட்டைக்குள் விழுந்து இரண்டு சிறுவர் பலி
வேதாரண்யம் அருகே குட்டைக்குள் விழுந்து இரண்டு சிறுவர் பலி
வேதாரண்யம் அருகே குட்டைக்குள் விழுந்து இரண்டு சிறுவர் பலி
வேதாரண்யம் அருகே குட்டைக்குள் விழுந்து இரண்டு சிறுவர் பலி
ADDED : செப் 01, 2011 11:49 PM
வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் குட்டையில் விழுந்து பரிதாமாக இறந்தனர்.
வேதாரண்யம் அருகிலுள்ள தாணிக்கோட்டகம் சின்னதேவன் காட்டைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் செடில்ராஜ் (9). அதே பகுதியைச் சேர்ந்த குமார் மகன், தமிழ்மணி(6). சிறுவர்கள் இருவரும் அப்பகுதியில் இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான இடத்தில் குட்டை போல் வெட்டப்பட்ட பகுதியில் நேற்று மாலை 6.30 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தனர். திடீரென இவர்கள் இருவரும் குட்டைக்குள் விழுந்ததில் மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்கள் உடல்கள் மீட்கப்பட்டு திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இதுகுறித்து வாய்மேடு போலீஸார் விசாரிக்கின்றனர். சிறுவர்கள் இருவர் குட்டைக்குள் விழுந்து இறந்ததால் சின்னதேவன் காடு கிராம மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.