" துணை முதல்வர் பதவியை நினைத்து துண்டு போடுகிறீர்களா ? - உதயநிதி பட,பட
" துணை முதல்வர் பதவியை நினைத்து துண்டு போடுகிறீர்களா ? - உதயநிதி பட,பட
" துணை முதல்வர் பதவியை நினைத்து துண்டு போடுகிறீர்களா ? - உதயநிதி பட,பட

மோடிக்கு வெற்றி கிட்டாது
இந்த முறை, 2 அல்லது 3 தொகுதிகளை பிடித்து விட வேண்டும் என்று தமிழகத்திற்கு பிரதமர் மோடி 6,7 முறை வந்தார். அவர் ஆயிரம் முறை வந்தாலும், வெற்றி கிடைக்காது என்று சொன்னேன். அதை மக்கள் உண்மை ஆக்கி உள்ளனர். பிரதமர் பிரசாரம் செய்தும் பா.ஜ.,விற்கு ஏமாற்றமே மிஞ்சியது. 40 தொகுதிகளிலும் ‛ இண்டியா' கூட்டணிக்கு மக்கள் வெற்றியைத் தந்தனர். வெற்றிக்கு இளைஞரணியும் காரணம். பா.ஜ., பொய்களை பரப்பி அரசியல் செய்கின்றனர்.
மறக்க மாட்டேன்
இங்கு பேசியவர்கள் எல்லாம் துணை முதல்வர் பதவி குறித்து தீர்மானம் நிறைவேற்றியாக சொன்னீர்கள். பத்திரிகைகளில் கிசுகிசு வருகிறது. வதந்திகளை படித்து விட்டு , இது நடக்க போகுதோ, என்று பலர் கோல் போடுகிறீர்கள், துண்டு போடுகிறீர்கள். எல்லா அமைச்சர்களும் முதல்வருக்கு துணையாக இருப்போம் . எவ்வளவு பெரிய பதவி வந்தாலும் , பொறுப்பு வந்தாலும் இளைஞரணி தான் எனது மனதிற்கு நெருக்கமானது. இளைஞரணியை மறக்க மாட்டேன்.
முக்கியம்
லோக்சபா, விக்கிவராண்டி தேர்தலுக்கு உழைத்தோமோ அதேபோல் 2026 சட்டசபை தேர்தலிலும் உழைக்க வேண்டும். பெண்கள், தி.மு.க.,வுக்கு ஓட்டு போட்டு உள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.