மொபைல்போனில் பேசியபடிமரணமடைபவர்கள் தொடர்கிறது
மொபைல்போனில் பேசியபடிமரணமடைபவர்கள் தொடர்கிறது
மொபைல்போனில் பேசியபடிமரணமடைபவர்கள் தொடர்கிறது
ADDED : அக் 04, 2011 12:50 AM
சென்னை:மொபைல்போனில் பேசியபடி, மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாகப் பலியானார்.கீழ்பாக்கம் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர் மகேஷ்குமார்,29.
நேற்று முன்தினம், தனது வீட்டில் 2வது மாடியில் நின்றபடி, இரவு 11 மணியளவில் மொபைல்போனில் பேசியபடி நடந்து கொண்டிருந்தார். அப்போது, தவறி மாடியில் இருந்து கீழே விழுந்ததில், தலையில் பலத்த காயமடைந்தார்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மகேஷ்குமார் ,நேற்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாகப் பலியானார். இதுகுறித்து, கீழ்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.சில தினங்களுக்கு முன், அண்ணா சாலை ஓட்டல் ஒன்றில் வேலை பார்த்த துரை, மொபைலில் பேசும் போது, மாடியில் இருந்து தவறி விழுந்து பலியானார். அவரைத் தொடர்ந்து, நேற்று மகேஷ்குமார் பலியாகி இருக்கிறார்.வாகனத்தை ஓட்டும் போது, மொபைல்போனில் பேசத் தடை இருப்பதைப் போல, இனி மாடியில் இருக்கும் போதும், மொபைல்போனில் பேசுவதை, நாமாகவே தடை செய்து கொள்வது நல்லது.


