சரித்திரம் படைத்த சுனிதா.. இனி அடுத்தது என்ன; வெளியான சுவாரஸ்ய தகவல்
சரித்திரம் படைத்த சுனிதா.. இனி அடுத்தது என்ன; வெளியான சுவாரஸ்ய தகவல்
சரித்திரம் படைத்த சுனிதா.. இனி அடுத்தது என்ன; வெளியான சுவாரஸ்ய தகவல்
ADDED : மார் 19, 2025 08:32 AM

வாஷிங்டன்; விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்பியுள்ள சுனிதா வில்லியம்சின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
விண்வெளியில் உள்ள சர்வதேச விண்வெளி மையத்தில் 9 மாதங்களாக இருந்த சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் இந்திய நேரப்படி இன்று அதிகாலையில் பூமிக்கு திரும்பினர். அவர்களை சுமந்து வந்த டிராகன் விண்கலம், புளோரிடா அருகே கடலில் பாதுகாப்பாக தரையிறங்கியது.
அவர்களின் விண்வெளி பயணம் வெற்றிக்கரமாக முடிந்து, பூமிக்கு திரும்பி உள்ளதை உலகமே கொண்டாடி வருகிறது. இந் நிலையில், 9 மாதங்கள் கழித்து பூமியில் கால் வைத்துள்ள சுனிதா வில்லியம்சின் அடுத்தக்கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது பற்றிய சுவாரசியமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல்கட்டமாக, அவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் முழுமையாக நடத்தப்படும். விண்வெளியில் இருந்து திரும்பியவர்களுக்கு பூமியில் நிமிர்ந்து நிற்கும் போது தலைசுற்றல், மயக்கம் ஏற்பட வாய்ப்பு உள்ளதே அதற்கு காரணம்.
எடை இழப்பு, கண் பார்வை, தோல் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்பதால், முழு மருத்துவ பரிசோதனை நடத்தப்படும். அதற்காக அவர்கள் 45 நாட்கள் நாசா மையத்தில் சிகிச்சை அளிக்கப்படும்.உடலும், மனமும் புத்துணர்வு பெற இந்த சிகிச்சை உதவும். இந்த சிகிச்சைகள் சுனிதா வில்லியம்சுக்கும் பொருந்தும்.
இது குறித்து ஹுஸ்டன் விண்வெளி மையத்தின் ஜான்சன் கூறியதாவது: விண்வெளி வீரர்கள் நாசாவுக்கு முதலில் அனுப்பப்படுவார்கள். அங்கு சில நாட்கள் அவர்கள் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்படுவார்கள். அதன் பிறகே குடும்பத்துடன் இணைவார்கள் என்றார்.
மருத்துவக் கண்காணிப்புக்கு பின்னர், சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் தங்களின் விண்வெளி பயணம் எப்படி இருந்தது, சந்தித்த சவால்கள் என்ன என்பதை பற்றிய அனுபவங்களை விண்வெளி மையத்தில் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொள்வார்கள்.
இந்த அனைத்து நடவடிக்கைகளுக்கு பின்னரே சுனிதா வில்லியம்ஸ் உள்ளிட்டோர் தங்கள் குடும்பத்தினருடன் இணைவார்கள்.