ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் இயற்ற சுயேச்சை எம்.எல்.ஏ., நோட்டீஸ் கொடுத்தார்
ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் இயற்ற சுயேச்சை எம்.எல்.ஏ., நோட்டீஸ் கொடுத்தார்
ஜம்மு - காஷ்மீர் சட்டசபையில் தீர்மானம் இயற்ற சுயேச்சை எம்.எல்.ஏ., நோட்டீஸ் கொடுத்தார்

ஸ்ரீநகர் : 'பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளி அப்சல் குருவுக்கு பொது மன்னிப்பு வழங்க வேண்டும்' என்று ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டசபை சுயேச்சை எம்.எல்.ஏ., நேற்று தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொடுத்துள்ளார்.கடந்த 2001ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி, இந்திய பார்லிமென்ட் மீது அப்சல் குரு தாக்குதல் நடத்தினார்.
இதுகுறித்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தண்டனைக்காக அவர் சிறையில் உள்ளார். ராஜிவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும் என, தமிழக சட்டசபையில் சமீபத்தில் தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது.
டில்லியில் உள்ள அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் அலுவலகத்தை தாக்கிய வழக்கில், தேவேந்தர் பால் சிங் புலந்தருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என, பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து, காஷ்மீர் முதல்வர் ஒமர் அப்துல்லா, தனது வலைதளத்தில் குறிப்பிடுகையில், 'ராஜிவ் கொலையாளிகளுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க தமிழக சட்டசபை தீர்மானம் இயற்றியுள்ளது. இதேபோல், பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் குறைக்க, காஷ்மீர் மாநில சட்டசபை தீர்மானம் இயற்றினால், எதிர்க்கட்சிகள் சும்மா இருப்பார்களா என கேட்டிருந்தார்.இந்நிலையில், ஜம்மு - காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டம், லான்கேட் தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ., ஷேக் அப்துல் ரஷீத், 'பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளி அப்சல் குருவுக்கு மனிதாபிமானத்துடன் பொது மன்னிப்பு வழக்க வேண்டும். வரும் 26ம் தேதி துவங்கும் சட்டசபை கூட்டத்தில் இந்த தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும் என நம்புகிறேன்' என்றார்.