அசாமில் கொடூரம்: வகுப்பறையில் ஆசிரியரை கொலை செய்த மாணவன்
அசாமில் கொடூரம்: வகுப்பறையில் ஆசிரியரை கொலை செய்த மாணவன்
அசாமில் கொடூரம்: வகுப்பறையில் ஆசிரியரை கொலை செய்த மாணவன்
ADDED : ஜூலை 07, 2024 05:36 PM

கவுகாத்தி: பள்ளிச் சீருடையை அணியாததை கண்டித்த ஆசிரியரை, வகுப்பறையில் மாணவன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அசாமில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அசாமின் சிவசாகர் மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் வேதியியல் பாட ஆசிரியராக பருவா பெஜாவாடா(55) என்பவர் பணியாற்றி வந்தார். நேற்று( ஜூலை 06), 16 வயதான பிளஸ் 1 மாணவனை சரியாக படிக்காததற்கும், தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதற்கும் திட்டி உள்ளார். பெற்றோரை அழைத்து வரும்படி கூறியுள்ளார்.
பிறகு மதியம் அந்த மாணவன் பள்ளிச்சீருடை அணியாமல் வகுப்புக்கு சாதாரண உடையில் வந்துள்ளார். இதனை பருவா பெஜாவாடா கண்டித்து, வெளியே செல்லும்படி கூறி உள்ளார். இதனையடுத்து கோபமடைந்த அந்த மாணவன், பையில் மறைத்து வைத்து இருந்த கத்தியை எடுத்து ஆசிரியரை தலையில் குத்தினார். அதில் படுகாயமடைந்த ஆசிரியர் ரத்த வெள்ளத்தில் சரிந்து உயிரிழந்தார். கத்தியால் குத்திய மாணவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.