Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/கடற்கரை கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தம்

கடற்கரை கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தம்

கடற்கரை கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தம்

கடற்கரை கிராமங்களுக்கு பஸ் போக்குவரத்து நிறுத்தம்

ADDED : செப் 20, 2011 11:04 PM


Google News
தூத்துக்குடி: கூடங்குளம் அணுமின் நிலைய போராட்டம் காரணமாக, திருச்செந்தூரிலிருந்து சுற்றுப்புற கடற்கரை கிராமங்களுக்கு பஸ் இயக்கப்படுவது, தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக்கோரி நடத்தப்படும் மக்கள் போராட்டம் வலுவடைந்து, அது, தூத்துக்குடி மாவட்டத்திற்கும் பரவியுள்ளது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி, திருச்செந்தூர் அமலிநகரில் மீனவர்கள், 2,000 பேர், நேற்று முன்தினம் உண்ணாவிரதம் இருந்தனர். நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. கடந்த, 18ம் தேதி இரவு திருச்செந்தூர், ஆலந்தழையில் அரசு பஸ் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டுவீசினர். இதுபோன்ற அசம்பாவிதத்தை தவிர்க்க, முன்னெச்சரிக்கையாக திருச்செந்தூர் சுற்றுப்புற கடற்கரை கிராமங்களுக்கு அரசு பஸ் இயக்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிற ஊர்களுக்கு இயக்கப்படும் பஸ்கள், கடற்கரை பகுதி வழியாக செல்லாமல், மாற்றுப்பாதையில், போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்படுகின்றன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us