ADDED : ஜூலை 15, 2011 01:33 AM
முள்ளிப்பள்ளம் : சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளம் வெள்ளாளர் உறவின்முறை சங்கம்,வ.உ.சிதம்பரம்பிள்ளை அறக்கட்டளை சார்பில் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
சங்க தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார். பவர் நர்சரி பள்ளி தாளாளர் ரஜினிகாந்த் வரவெற்றார். எம்.ராஜா, ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியை காந்தாமணி முன்னிலை வகித்தனர். 10 வகுப்பு தேர்வில் முதல்மதிப்பெண்கள் பெற்ற அழகுசுந்தரம், அபிநயா மற்றும் சிறந்த நூறு மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.