/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/மகளை பார்க்க வற்புறுத்திய மனைவி தீயிட்டு கொளுத்திய கணவர் கைதுமகளை பார்க்க வற்புறுத்திய மனைவி தீயிட்டு கொளுத்திய கணவர் கைது
மகளை பார்க்க வற்புறுத்திய மனைவி தீயிட்டு கொளுத்திய கணவர் கைது
மகளை பார்க்க வற்புறுத்திய மனைவி தீயிட்டு கொளுத்திய கணவர் கைது
மகளை பார்க்க வற்புறுத்திய மனைவி தீயிட்டு கொளுத்திய கணவர் கைது
ADDED : செப் 27, 2011 12:30 AM
ப.வேலூர்: மகளை பார்க்கச் செல்ல வேண்டும் என அடம் பிடித்த, ப.வேலூர் இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்த மனைவியை, தீயிட்டுக் கொளுத்திய கணவரை, போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ப.வேலூர், இலங்கை தமிழர் முகாமைச் சேர்ந்தவர் ரத்தினசபாபதி (46).
அவரது மகள் ரேகா (12), விருதுநகர் குள்ளன்சந்தையில் உள்ள முகாமில் பாட்டியுடன் தங்கி, அங்குள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். மகளை பார்க்கச் செல்ல வேண்டும் என, ரத்தினசபாதியிடம், அவரது மனைவி சந்திரகலா (36) தெரிவித்து வந்துள்ளார்.
நேற்று மாலை கணவர் ரத்தினசபாபதியிடம், மகளை பார்க்கச் செல்வது சம்மந்தமாக சந்திரகலா பேசியுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த ரத்தினசபாதி, வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை சந்திரகலாவின் மீது ஊற்றி தீ வைத்துள்ளார். அதில் பலத்த காயமடைந்த சந்திரகலா, நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்த ப.வேலூர் போலீஸார், ரத்தினசபாதியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.