/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வளர்கல்வி பணியாளர் சங்க மாநில செயற்குழுவளர்கல்வி பணியாளர் சங்க மாநில செயற்குழு
வளர்கல்வி பணியாளர் சங்க மாநில செயற்குழு
வளர்கல்வி பணியாளர் சங்க மாநில செயற்குழு
வளர்கல்வி பணியாளர் சங்க மாநில செயற்குழு
ADDED : ஜூலை 13, 2011 01:00 AM
உளுந்தூர்பேட்டை : தமிழ்நாடு வளர் கல்வி பணியாளர்கள் நல சங்க மாநில
செயற்குழுக் கூட்டம் உளுந்தூர்பேட்டையில் நடந்தது.மாநில பொது செயலா ளர்
சுந்தர் தலைமை வகித்தார்.
பொருளாளர் இளையபெருமாள் முன்னிலை வகித்தார்.
மாவட்ட செயலாளர் ராஜபூபதி வரவேற்றார். தமிழ்நாடு அரசு பணி யாளர்கள் சங்க
பொதுச்செயலாளர் முருகன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் முதல்வராக
பொறுப்பேற்ற ஜெ.,க்கு பாராட்டு தெரிவித்தல், அனைத்து கிராம அண்ணா
மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் செயல்படும் நூலகத்திற்கு வளர் கல்வி
பணியாளர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். கடந்த 2009ம் ஆண்டு பணி நீக்கம்
செய்யப்பட்ட வளர் கல்வி பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்த வேண்டும்.
இவர்களை காலியாக உள்ள அரசு சத்துணவு, அங்கன்வாடி, உதவியாளர் பணியிடங்களில்
நியமனம் செய்ய வேண்டும். கற்கும் பாரதம் திட்ட பணியாளர்களுக்கு வங்கி
கணக்கு மூலம் மதிப்பூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள்
நிறைவேற்றப்பட்டன. மாவட்ட தலைவர் ஜெயசங்கர், செயற்குழு உறுப்பினர்
சுப்ரமணியன், மாவட்ட செயலாளர்கள் ரங்கராஜ், ராமகிருஷ்ணன், ரங்கசாமி,
சுந்தரம், கோபிநாத், கமலநாதன், அந்தோணி, மாரி, ஜெயக்குமார், ஒன்றிய துணை
செயலாளர் துரை கலந்து கொண்டனர்.