என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: அசாம் போலீசார் அதிரடி
என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: அசாம் போலீசார் அதிரடி
என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: அசாம் போலீசார் அதிரடி
UPDATED : ஜூலை 17, 2024 05:48 PM
ADDED : ஜூலை 17, 2024 05:47 PM

குவஹாத்தி: அசாமில் போலீசார் நடத்திய என்கவுன்டரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
அசாம் மாநிலம் கச்சார் மாவட்டத்தில் இன்று(ஜூலை 17) போலீசாருக்கும் பயங்கரவாதிகளுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகளிடம் இருந்து 2 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
இது குறித்து போலீசார் ஒருவர் கூறியதாவது: ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த துப்பாக்கி சண்டையில் 3 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். 3 போலீசாருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டன. காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.